Home இலங்கை அரசியல் அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத தென்னிலங்கை வேட்பாளர்கள்!

அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத தென்னிலங்கை வேட்பாளர்கள்!

0

அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத வேட்பாளர்களாகவே தென்னிலங்கை வேட்பாளர்கள் செயற்பட்டு வருவதாக பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்தின் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியபோரதீவு பகுதியில் இன்று (11.09.2024) இடம் பெற்ற  மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த நாட்டிலே நடந்த நீண்ட கால இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது சுட்டிக்காட்டிப்படவில்லை.

அரசியல் தீர்வு

அந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்
கொடுக்க வேண்டும், குறிப்பாக சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கொடுக்க வேண்டும்
என்ற எந்த ஒரு வாசகங்களும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில்
குறிப்பிடப்படவில்லை.

ஆனால் எனது தமிழ் தலைமைகள் கூறிய விடயம் என்னவெனில் சமஸ்டி அடிப்படையிலான
தீர்வை முன்வைத்தால் நாங்கள் அனைவரும் அவர்களை பரிசீலிக்க தயார் என்று கூறியிருந்தனர்.

மாறாக அவர்களின் எந்த ஒரு தேர்தல்
விஞ்ஞாபனத்திலும் சமஷ்டி தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

2015 நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏக்கிய ராஜ்ய என்பதற்குள் நாங்கள்
சமஸ்டியையும் தேடினோம். அதுகூட இவர்களது விஞ்ஞாபனங்களில் இல்லை.

எனவே அரசியல்
தீர்வை முன்னிலைப்படுத்தாத வேட்பாளர்களாகவே இந்த பிரதான மூன்று வேட்பாளர்களும்
செயற்பட்டு கொண்டுள்ளார்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version