Home சினிமா போன ஜென்மத்தில் நான் அஜித்துடன் பிறந்தவன்… பிரபல நடிகர் ஓபன் டாக்

போன ஜென்மத்தில் நான் அஜித்துடன் பிறந்தவன்… பிரபல நடிகர் ஓபன் டாக்

0

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதில் குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றியடைந்தது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகவும் இதுவே ஆகும். இதனால் அடுத்ததாக மீண்டும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் AK 64 படத்திற்காக இணைகிறார்கள். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளிவரவுள்ளது. மேலும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் – பராசக்தி படங்களின் முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு தெரியுமா?

ரமேஷ் கண்ணா பேட்டி

அஜித்தை பற்றி பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில், அஜித் குறித்து பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: “அஜித் போன ஜென்மத்தில் என் கூட பிறந்தவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த சினிமாவில் நான் அவர் கூடத்தான் அதிகமாக நடிச்சு இருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன் அவர் கூட பல படம் நான் நடிச்சது என்னோட லக் தான்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version