Home இந்தியா முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

0

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் (Vijay) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (18) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயங்கள் உட்பட, சர்வதேச அளவிலும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரம் போற்றுதும்

இது தொடர்பில் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ள விஜய், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.

மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும்” என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version