Home சினிமா நடிகர் விக்ரம் காரை துரத்திய ரசிகர்கள்.. விக்ரம் செய்த தரமான செயல், வீடியோ வைரல்

நடிகர் விக்ரம் காரை துரத்திய ரசிகர்கள்.. விக்ரம் செய்த தரமான செயல், வீடியோ வைரல்

0

விக்ரம் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்தது.

இப்படத்திற்கு பின் விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிம்மில் இருந்து தப்பி ஓடும் நடிகை மிருணாள் தாகூர்.. வைரலாகும் வீடியோ, இதோ!

மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளிவந்தது.

மாஸ் செயல்

இந்நிலையில், விக்ரம் குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, இரண்டு நபர்கள் விக்ரம் இருந்த காரை வேகமாக பின் தொடர்ந்து சென்றது மட்டுமின்றி, காரில் உள்ள விக்ரமைப் பார்த்ததும் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது தனது ரசிகர்களை ஹெல்மெட் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டும் படி அட்வைஸ் செய்துள்ளார். அப்போது எடுத்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

NO COMMENTS

Exit mobile version