Home சினிமா இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

0

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.

அப்படி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. பலரும் இவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் மலையாளத்தில் தனது திரை பயணத்தை துவங்கி, பின் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

நயன்தாரா

சில காதல் சர்ச்சைகளும் இவரை சூழ்ந்தது. பின் அவை அனைத்தையும் தாண்டி இன்று லேடி சூப்பர்ஸ்டாராக முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆம், நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் தான் இது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

ஒரு பக்கம் குடும்பம் மற்றொரு பக்கம் சினிமா என பிசியாக இருக்கும் நயன்தாராவின் ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்தது. மேலும் அதை சுற்றி எழுந்த சர்ச்சைகளும் பெரும் பேச்சாக திரை வட்டாரத்தில் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/actress-nayanthara-childhood-photo-1732427072

NO COMMENTS

Exit mobile version