Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கு முக்கிய அறிவிப்பு

0

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதிப்பத்திரங்களும் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை அனைத்து முக்கிய பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நடைபெறவுள்ளது.

அதற்கமைய, குறித்த பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தளபாட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் 

மேலும், நாடு முழுவதும் பரீட்சை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தளபாட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்காக மொத்தம் 2,362 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கடமைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version