Home முக்கியச் செய்திகள் வெளிநாடொன்றில் காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் செயற்கை நுண்ணறிவு!

வெளிநாடொன்றில் காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் செயற்கை நுண்ணறிவு!

0

சீனாவில் (China) வானிலை மற்றும் காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், “FuXi-Subseasonal,” என்ற பெயருடைய குறித்த செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமானது, ஷாங்காய் அகாடமி ஆஃப் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஃபார் சயின்ஸ் (SAIS), ஃபுடான் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் தேசிய காலநிலை மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, uXi-Subseasonal மாதிரியானது காலநிலை முன்னறிவிப்புகளில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேகமாக, மற்றும் துல்லியமாக முன்னறிவிப்புகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

[SHFBNVU
]

காலநிலை அறிக்கை

குறிப்பாக, 36 நாட்களுக்கு முன்பதாகவே வானிலை மற்றும் காலநிலை அறிக்கைகளை மிகத்துள்ளியமாக கணிப்பதால் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை மக்களுக்கு இலகுவாக வழங்க முடிகிறதாக “FuXi-Subseasonal” ஆராய்ச்சி குழுவின் பொறுப்பான விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், காற்றின் வேகம், வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை கணிக்கக் கூடிய Fengwu எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒன்றும் சீனாவில்  கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version