Home இந்தியா விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு : கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு : கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

0

அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு வந்ததாகவும் ஆனால் அழைப்பில் யாரும் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் 5 நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுவரையிலும் 170 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அவசர அழைப்பு

இந்நிலையில் விபத்துக்குள்ளாகும் முன் அவசர அழைப்பு வந்ததாகவும் ஆனால் யாரும் பேசவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மே டே கால்” விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில் அதனை இயக்குபவரால் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞையாகும்.

பிரெஞ்சு மொழியிலிருந்து அதாவது மெய்டர் என்றால் உதவி செய்யுங்கள் என்று அர்த்தம், இந்த வார்த்தை தான் மே டே கால் என உலகம் முழுவதும் அவசர உதவிக்கான அழைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கருப்புபெட்டி கிடைத்தால் மட்டுமே கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/-l9Yn6__C80

NO COMMENTS

Exit mobile version