Home இலங்கை அதிகரிக்கப்படும் கொழும்புக்கான விமான சேவைகள்! வெளிநாட்டு நிறுவனமொன்றின் அறிவிப்பு

அதிகரிக்கப்படும் கொழும்புக்கான விமான சேவைகள்! வெளிநாட்டு நிறுவனமொன்றின் அறிவிப்பு

0

ஏர் ஏஷியா நிறுவனம் இலங்கை–தாய்லாந்து விமான சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 2025 டிசம்பரிலிருந்து கொழும்பு–பெங்கொக் சேவை வாரத்தில் 7 இலிருந்து 10 விமானங்களாக உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிக வசதி

இதனால் பயணிகள் அதிக வசதியுடன் பெங்கொக்கில் இருந்து பாலி, ஹானாய், பூக்கெட் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.

இந்த மாற்றம் சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய இணைப்பை வலுப்படுத்தும் ஏர் ஏஷியாவின் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

  

NO COMMENTS

Exit mobile version