Home இலங்கை பொருளாதாரம் பிரான்ஸில் இருந்து இலங்கை கொள்வனவு செய்த எயார்பஸ் விமானத்தின் முதல் விமான பயணம்

பிரான்ஸில் இருந்து இலங்கை கொள்வனவு செய்த எயார்பஸ் விமானத்தின் முதல் விமான பயணம்

0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்துள்ள எயார்பஸ் A330-200 விமானம் இன்று பிற்பகல் தனது முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, இந்த இலங்கை விமானம் இன்று பிற்பகல் 01.48 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவிற்கு சென்றுள்ளது.

அங்குள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு UL-115 என்ற விமான எண்ணின் கீழ் பயணத்தை மேற்கொண்டது.

முதல் விமான பயணம்

இந்த புதிய அகலமான உடல் கொண்ட எயார்பஸ் A330-200 விமானம் 04 ஆம் திகதி பிரான்ஸில் உள்ள எயார்பஸ் விமான உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச நடவடிக்கைகளை பூர்த்தி செய்த நிலையில் இன்று தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version