Home சினிமா கார் ரேஸில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் ரிலீஸ் தேதி கூறிய அஜித்.. இதோ...

கார் ரேஸில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் ரிலீஸ் தேதி கூறிய அஜித்.. இதோ பாருங்க

0

அஜித் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் இன்று துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார். கார் மற்றும் பைக் ரேஸில் மிகவும் ஆர்வம் கொண்டவர் அஜித் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

24 மணி நேரம் நடைபெறும் இந்த கார் ரேஸில் அஜித் தனது குழுவுடன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பங்குபெறும் 24 Hours கார் ரேஸ் தொடங்கியது.. Live Video

இந்த நிலையில், கார் ரேஸ் துவங்குவதற்கு முன் அஜித்திடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அஜித், தனது படங்களின் ரிலீஸ் குறித்து தகவலை கூறியுள்ளார்.

ரிலீஸ் குறித்து பேசிய அஜித் 

இதில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படம் இம்மாதம் வெளிவரும் என்றும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

விடாமுயற்சி படம் ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version