Home இந்தியா ரணில் – சஜித் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாரா தோவல் : முற்றாக நிராகரித்துள்ள இந்திய...

ரணில் – சஜித் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாரா தோவல் : முற்றாக நிராகரித்துள்ள இந்திய தரப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith Premadasa) இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச்செய்வதற்கான இறுதி முயற்சிகளுக்காகவே அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக வதந்திகள் பரவியுள்ளன.

அந்தவகையில், அத்தகைய தேவை ஏற்பட்டிருந்தால், கொழும்பு (Colombo) வரை பயணிப்பதை விட, புதுடில்லியில் (New Delhi) இருந்தே சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் தோவல் பேசியிருக்க முடியும் என்று மூத்த இராஜதந்திர அதிகாரி ஒருவர் குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்

குறிப்பாக, அவர் இந்த தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டியிருந்தால் கூட, ஊடகங்களுக்கும் மற்றைய கட்சிகளுக்கும் தெரியாமல் அவர் அதைச் செய்திருக்கலாம் என  கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே தோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version