அஜித் – ஆதிக்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர்ஹிட்டானது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகவும் தற்போது cதான் உள்ளது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் – அஜித் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஆம், AK 64 திரைப்படத்தை ஆதிக் இயக்கவுள்ளார். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக அம்மாவை நேரில் பார்த்த பல்லவன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் ரெஜினா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என அஜித் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், AK 64 படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “பொழுதுபோக்கான திரைப்படமாக இருக்கும். குட் பேட் அக்லி படம் கொடுத்தோம், அதிலிருந்து வேறுபடும் கதைக்களத்தில் படம் கொடுக்கவேண்டும் என்பதுதான் ஆசை. கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை சார்ந்த விஷயங்கள் நன்றாக வந்துகொண்டு இருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்” என கூறியுள்ளார்.
