Home சினிமா தனது பெயரை மாற்றிய பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட்..வைரலாகும் தகவல்

தனது பெயரை மாற்றிய பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட்..வைரலாகும் தகவல்

0

நடிகை ஆலியா பட்

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் மகேஷ் பட்டின் மகளாகவும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் திகழ்பவர் ஆலியா பட்.

ஸ்டார் கிட் என்ற பட்டத்துடன் சினிமா துறையில் நுழைந்தாலும் தனது கடின உழைப்பாலும், சிறந்த நடிப்பாலும் இன்று சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கிறார்.

GOAT படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை.. உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

கங்குபாய் கதியவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

தனது பெயரை மாற்றிய ஆலியா பட்

இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆலியா தனது பெயரை மாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது, ஆலியா பட் என்றிருந்த அவர் பெயரை ஆலியா பட் கபூர் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆலியா அவர் கணவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version