Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தவறான தகவல்களை பரப்ப நடவடிக்கை: அரியநேத்திரன் குற்றச்சாட்டு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தவறான தகவல்களை பரப்ப நடவடிக்கை: அரியநேத்திரன் குற்றச்சாட்டு

0

AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்கள், பரப்ப பல தரப்பினர்களும் திட்டமிட்டுள்ளதாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விருப்பு வாக்கு

“ சிலர் விருப்பு வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கூறுகின்றார்கள். அவ்வாறு செய்யாது. தனியே தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள்.

அதுதான்
ஒவ்வொரு தமிழ் மக்களின் வரலாற்று கடமையாகும். கடந்த 23ஆம் திகதி “நமக்காக நாம்” என்ற பிரசார பணியை நாம் யாழ்ப்பாணத்தில் பொலி கண்டியில் ஆரம்பித்து, எட்டு மாவட்டங்களிலும் பிரசார
பணிகளை முன்னெடுத்தோம்.

அதனூடாக மக்கள் மத்தியில் பொது வேட்பாளருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் இன்றையதினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் பொது வேட்பாளர் பற்றி வதந்திகளை பொய்யான தகவல்களை பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version