Home இலங்கை கல்வி நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

0

சீரற்ற கால நிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்
பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு இன்று (26) இரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (27) முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கனமழை 

இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

NO COMMENTS

Exit mobile version