Home முக்கியச் செய்திகள் ஊடகவியலாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

ஊடகவியலாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

0

சமூக செயற்பாட்டாளர் வைத்தியர் சி. ஹயக்கிரிவனை (கார்த்தி ஹயன்) எதிர்வரும் 28.11.2025 அன்று திருக்கோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோணமலையில் சமூக மட்ட அமைப்பாக உரிய பதிவுகளுடன், சுயசார்பு ரீதியில் இளையோரின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் விருத்தி சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற அமைப்பு ஹயக்கிரிவனால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது அலுவலகத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்து இந்த அழைப்பாணையை அலுவலக உத்தியோத்தரிடம் கையளித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பலமுறை குறித்த அமைப்பின் அலுவலகர்கள், பங்குபற்றுநர்கள், மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (கார்த்தி ஹயன்) சமூக செயற்பாட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version