Home இலங்கை அரசியல் ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது : சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல

ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது : சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல

0

இலங்கையில் (Sri Lanka) தமிழ் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை
ஏமாற்றிய நிலையில் நாம் சிங்கள மக்ககளிடம் உரிமையை இரந்து கேட்கக் கூடாது என
இலங்கையின் கட்டமைப்பான இன அழிப்பும் தமிழ் மக்களின் இனச் சுத்திகரிப்பும்
என்ற நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் (
C. V. Vigneswaran) இல்லத்தில் நேற்று (21) இடம்பெற்ற இலங்கையின் கட்டமைப்பான இனவழிப்பும் தமிழ் மக்களின் இன
சுத்திகரிப்பும் என்ற நூலின் அறிமுக உரையை ஆற்றிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுநர் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

அரசியல் தலைமை

மேலும் தெரிவிக்கையில், “1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இலங்கையில்
ஏற்பட்ட சம்பவம் என்னை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்திக்க வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டிருந்தேன்.

தற்போது இந்த நூலை இரண்டு வருட முயற்சியின் பயனாக தற்போது வெளியிட்டு
வைப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்த நூலை எழுத வேண்டும் என நான் சிந்தித்தபோது  தமிழ்
மக்களின் அவலங்களை கூறுவது மட்டுமல்லாது ஒரு அரசியல் தலைமையின் வழிநடத்தலில்
சர்வதேசம் வரை செல்ல வேண்டும் என விரும்பினேன்.

இதற்காக நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டேன் அவர்
நீங்கள் நூலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் அதனை நான் வெளியிட்டு
வைக்கிறேன் என்றார்.

இந்த நூல் கட்சி சார்ந்தது அல்ல தமிழ் மக்களுக்காக முன் நின்று
செயல்படுபவர்கள், தமிழ் மக்கள் வாழுகின்ற சகல நாடுகளுக்கும் சர்வதேச இராஜதந்திர மட்டத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று
சேர்க்க வேண்டும்.

சர்வதேச அரங்கு

இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின்
உரிமை சார்ந்த விடயம் உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கவில்லை.

இஸ்ரேலுக்காக (Israel) தூதர்கள் போராடினார்கள் அவர்களின் ஒன்றிணைந்த பலம் சர்வதேச
நீதியில் பேச வைத்த நிலையில் தமிழ் மக்களின் பலமும் சர்வதேச அரங்கில்
எதிரொலிக்க வேண்டும்.

பல இன மக்கள் வாழும் இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட
வேண்டும் அல்லாமல் தமிழினம் சிங்களவர்களிடம் இரந்து கேட்கக் கூடாது.

ஒரு இனத்தை பின் நிறுத்தி மற்றைய இனம் அதிகாரத்தை செலுத்துவது ஜனநாயகம் அல்ல” என்றும் நூலின் ஆசிரியர் ச. செல்வேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல் – கஜி

டக்ளஸ் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

யாழ். தலைவர்கள் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை: பிள்ளையான் சாடல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version