நாட்டில் சுமார் நாற்பதாயிரம் (40000) ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் குறிப்பாக மேல், மத்திய, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகளவு ஆசிரிய வெற்றிடங்கள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 7000 ஆசிரியர்களுக்கும், மத்திய மாகாணத்தில் 6200 ஆசிரியர்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் 3698 ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு
அரசாங்கம் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே நியமனங்களை காலம் தாழ்த்தி வருவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் பாடசாலை ஆரம்பமாக உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முலும் ஆசிரியர் வெற்றிடங்கள் உரிய முறையில் கிரமமான அடிப்படையில் நிரப்பப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணபாதையில் மாற்றம் – ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்: வேகமாக உயரும் மசகு எண்ணெய்யின் விலை
மேலதிக தகவல் – ராகேஷ்