Courtesy: Sivaa Mayuri
2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக,1,402 பில்லியன் ரூபாய்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அரச விவகாரங்களை பராமரிக்கவும், தொடர்ந்து திட்டங்களை செயற்படுத்தவும், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், 220.06 பில்லியன் ரூபாய்கள் என்ற அதிக ஒதுக்கீடுகளை பெற்றுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி
இதனை தவிர, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 186.02 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 170.47 பில்லியன் ரூபாய்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 161.99 பில்லியன் ரூபாய்கள்,
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 142.95 பில்லியன் ரூபாய்கள்,
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்காக 92 பில்லியன் ரூபாய்கள்,
மற்றும் விவசாயம், காணிகள், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 67.36 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.