Home முக்கியச் செய்திகள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான வழிக்காட்டி

மேலும், ஆசிரிய சேவையில் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கான வழிக்காட்டி முறையை மாற்றுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவித்து அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனை ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டில் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/allowance-correction-of-answer-sheet-hiked-1719303922?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version