Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறை கொடுப்பனவு – சஜித் கோரிக்கை

நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறை கொடுப்பனவு – சஜித் கோரிக்கை

0

நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்ற அமர்வில் போது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தின் பணியை திறம்பட உறுதிப்படுத்த சகல துறைகளிலும்
அர்ப்பணிப்புள்ள நல்ல பணிக்குழாம் இங்கு காணப்படுகிறது.

விடுமுறை கொடுப்பனவு

ஜோசப் மைக்கல்
பெரேரா காலத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விடுமுறை
கொடுப்பனவுத் திட்டத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதற்கு Staff Advisory
Committee இல் அனுமதியைப் பெற்றுக் கொண்டோம்.

அந்த தீர்மானத்தை
நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுகிறது.

சமீபகாலமாக நாடாளுமன்ற அதிகாரிகள் சார்பில் நல்ல பல தீர்மானங்களை
எடுத்தீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த
முற்போக்கான பயணத்தில் முன்சென்று Staff Advisory Committee இல் அன்று நாம்
எடுத்த தீர்மானத்தை, அதாவது 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் உள்ள
விடுமுறைக் கொடுப்பனவு

திட்டத்தை புத்தாண்டு முதல் வழங்க நடவடிக்கை
எடுக்குமாறு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version