Home உலகம் இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

0

உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனங்களான அமேசான் மற்றும் மைக்ரோசொப்ட் ஆகியவை இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் 52 பில்லியன் டொலர் மதிப்பிலான மிகப்பெரிய முதலீட்டைச் செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலீடு

அதன்படி, மைக்ரோசொப்ட் நிறுவனத்திடமிருந்து இந்தியா 17.5 பில்லியன் டொலர் முதலீட்டைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமேசான் நிறுவனம் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version