Courtesy: Sivaa Mayuri
இந்தியாவின் அதானி குழுமத்துக்கு எதிரான நீதித்துறை இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, அதானியின் இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு 550 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள துறைமுக முனையத் திட்டத்திற்கு 553 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.
அதானி குழுமம்
இந்தத் திட்டம் இந்திய அதானி குழுமத்துக்கு ஓரளவு சொந்தமானதாகும்.
2 பில்லியன் டொலர் இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக, முன்னதாக அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
நியூயோர்க்கில் உள்ள மத்திய அரசு சட்டத்தரணிகள் இதனை அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ஒருமைப்பாடு மற்றும் இணக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதை உறுதிசெய்ய தாம்; கடமைப்பட்டுள்ளதாக, இலங்கையில் அதானியின் திட்டத்துக்கு நிதி வழங்கும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது
கடன் உறுதிப்பாட்டின் கீழ் இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகள்
எனினும் அமெரிக்காவின் இந்த நிறுவன அறிவிப்பு தொடர்பில், அதானி குழுமம் உடனடியாக பதில் எதனையும் வழங்கவில்லை.
முன்னதாக, அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மறுக்கப்பட்டவை என்று அதானி குழுமம் தெரிவித்திருந்தது.
அத்துடன் அனைத்து சாத்தியமான சட்ட வழிகளையும் நாடுவதாக அது குறிப்பிட்டிருந்தது.