கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோட உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஆனந்தன் பல நாட்களாக வடக்கில் கேரளா கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா தொகை
ஆனந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரின் உதவியாளர் ஒருவரிடமிருந்து 10 கிலோகிராமுக்கும் அதிகமான கேரளா கஞ்சா தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியை இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளமை அண்மையில் வெளிவந்தது.
இந்நிலையில், அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வடக்கின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
