Home இலங்கை அரசியல் யாழ். வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

யாழ். வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

0

யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், குறித்தவீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள்யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம்

குறிப்பாக, யாழ்ப்பாணம் – பலாலி வீதி (கிழக்கு பக்கம்): வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள வீதி இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த வீதி பருத்தித்துறை பொன்னாலை வீதியுடன் இணைவதுடன் உள்ளூர் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version