Home முக்கியச் செய்திகள் நம்பிக்கை அழிந்தது : நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை வீரர்

நம்பிக்கை அழிந்தது : நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை வீரர்

0

அணியென்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை (Sri Lanka) அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்யூஸ் (Angelo Mathews) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு அணி என்ற வகையில் எங்களின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிந்து போனதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

எங்களை மன்னிக்குமாறு கோருகிறோம். நாங்கள் இங்கு வந்ததிற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.

பந்து வீச்சு

நாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை.

பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் குறைந்த ஓட்டங்களை பெற்றிருந்த போதும் அதற்காக போராட முடிந்தது.

ஆனால் இறுதியாக எங்களால் வெற்றிபெற முடியவில்லை.

இதுபோன்ற போட்டியில் ஒரு போட்டியில் கூட தோற்றால், முன்னேறுவது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு மிகவும் கடினமாக இருந்தது.

தோல்வியை எதிர்பார்க்கவில்லை

மேலும் துரதிஷ்டவசமாக நேபாள (Nepal) போட்டியும் மழையால் தடைபட்டது.

எங்களுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.

அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.

எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தர முடியாமை குறித்து வருத்தமளிக்கிறது.

எனவே எங்களை மன்னியுங்கள், நாங்கள் தோல்வியடைய எதிர்பார்க்கவில்லை.

வெற்றி பெறவே எதிர்பார்த்தோம்.

எனினும் இந்த தொடரில் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்

NO COMMENTS

Exit mobile version