தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தடையாக இருப்பவர்களையே தேர்தலில் முன்னிலைப்படுத்துவது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தோல்வியடைந்த செயற்பாடு என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் உடனடியாகவே தமிழ் அரசியல் தலைமைகள் செய்திருக்க வேண்டியது பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டுவருவது தான்.
காலாகாலமாக யாரால் பிரச்சினை ஏற்படுகின்றதோ அல்லது யாரோடு முரண்பட்டோமோ அவர்களையே கொண்டு வந்து இவர்களுக்கு வாக்களியுங்கள் வாக்களியுங்கள் என்ற போக்கினை அரசியலில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம் இன்றைக்கு காலம் தாழ்த்தியே செய்யப்படுகின்றது அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்களுடைய ஆணை அரசியல் கட்சிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுகின்றது என்பது உண்மை தான்.
ஆனால் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காது போனால் அவர்களுடைய இலக்குகள் தடம்புரள்கின்ற போது அவர்களைக் கேள்வி கேட்கக் கூடிய ஒரு வலுவான குரலாக, மக்களுடைய அங்கமாக தான் சிவில் சமூகங்கள் இருக்கின்றன என்ற அடிப்படை தெளிவு எனக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
https://www.youtube.com/embed/QS8RI85Zyt4