Home இந்தியா ரூபா 80 கோடி மதிப்புள்ள எருமை மாடு : எங்குள்ளது தெரியுமா..!

ரூபா 80 கோடி மதிப்புள்ள எருமை மாடு : எங்குள்ளது தெரியுமா..!

0

சுமார் 23 கோடி இந்திய ரூபாய் (சுமார் 80 கோடி இலங்கை ரூபாய்) மதிப்புள்ள எருமை மாடு(buffalo) ஒன்று இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

அன்மோல் என பெயரிடப்பட்டுள்ள இந்த எருமை 1500 கிலோ எடை கொண்டது. அன்மோலின் விருப்பமான உணவுகளில் முட்டை, பால் மற்றும் பாதாம் ஆகியவை அடங்கும்.

விவசாயக் கண்காட்சி

அன்மோல் ஹரியானாவில் நடக்கும் விவசாயக் கண்காட்சிகளிலும் கலந்து கொண்டது, அந்த கண்காட்சிக்கு வருபவர்களின் கண்களைக் கொள்ளையடித்துள்ளது.

அன்மோலின் உணவுக்காக ஒரு நாளைக்கு 1500 ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அன்மோல் தினமும் 250 கிராம் பாதாம், நான்கு கிலோ மாதுளை, 30 வாழைப்பழங்கள், ஐந்து லிட்டர் பால் மற்றும் 20 முட்டைகளை சாப்பிடுகிறது.

வாழ்க்கை முறையை மாற்ற மாட்டார்

தினசரி உணவு தவிர, கேக், பச்சை உணவு, நெய், சோயா பீன் மற்றும் மக்காச்சோளம் ஆகியவையும் உண்ண கொடுக்கப்படுகின்றன.

மேலும் அன்மோலின் செலவுக்கு உரிமையாளர் அன்மோலின் தாய் மற்றும் சகோதரியை விற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உரிமையாளர் அன்மோலின் வாழ்க்கை முறையை மாற்ற மாட்டார் என்றும் கூறப்படுகிறது

NO COMMENTS

Exit mobile version