Home இலங்கை அரசியல் இந்தியாவின் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றச்சாட்டு

இந்தியாவின் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றச்சாட்டு

0

அன்னையின் அறவழியை அன்று ஏற்க மறுத்த இந்தியா (India) இன்றாவது தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனநாயகப் போராளிகள்
கட்சியின் உபதலைவர் என். நகுலேஸ் தெரிவித்துள்ளார். 

அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” அன்னை பூபதி, அகிம்சை வழியில் ஈழத் தமிழ் மக்களுக்கு நியாமொன்றைப் பெற்றுக் கொடுக்க
முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய
அமைதிப் படையின் பிரசன்னத்தை தவிர்த்து அவர்களை இந்தியா மீள அழைத்துக் கொள்ள
வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணா விரதம் இருந்து உயிரைத் துறந்தார். 

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

உண்ணா விரதம் 

அவரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தாயகமெங்கும்
அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அன்னையின் அறவழியை அன்று இந்தியா (India)  ஏற்க மறுத்ததனாலேயே மூன்று
தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. அன்று
இந்தியா (India) ஈழத்தமிழர்களுக்கு இழைத்தது மாபெரும் துரோகமாகும்.

அமைதி என்ற பெயரில் வருகை தந்து தமிழர்களை சொல்லொனாத் துயரில் ஆழ்த்திய
அமைதிப்படை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுடன் கோரிக்கைகள்
பலவற்றை முன்நிறுத்தி மார்ச் மாதம் 1ஆம் நாளன்று அன்னை பூபதியம்மா உண்ணா
நோன்பினை ஆரம்பித்தார்.

ஆனால், அகிம்சையைப் போற்றும் இந்தியாவின் கண்களின்
அன்னையின் அகிம்சைப் போராட்டம் கணக்கெடுக்கப்படவில்லை.

நீராடச்சென்ற மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்

இந்தியாவின் அலட்சியம்  

அன்னையின் அறவழி மட்டுமல்ல தியாக தீபம் திலீபன் உட்பட ஈழத்தமிழர்களின் அறவழி
ஆயுத ரீதியான எந்தப் போராட்டத்தின் போதும் இந்தியா பாராமுகமாகவே
இருந்திருக்கின்றது என்பதே வரலாறுகள்.

இன்றுவரை இருக்கும் இந்த வரலாற்றை இந்தியா (India) மாற்ற முற்பட வேண்டும்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலவாறான நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கும்
நிலைமை இந்தியாவிற்குத் தெரியாமல் இல்லை.

அந்த நிலையில் இன்னும்
ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகும் விதமாக இந்தியாவின் செயற்பாடுகள் இருப்பது
மனவேதனையான விடயம். இருப்பினும் ஈழத்தமிழர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ இன்னும்
இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலைமைகளிலும்
மாற்றங்கள் இல்லை.

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

ஈழத்தமிழர்கள் விடயம்  

அகிம்சை வழியில் மாகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக்
கொடுத்தார். ஆனால், அதே அகிம்சை வழியிலான எமது தியாகிகளின் போராட்டங்கள்
மதிக்கப்படாமை காரணமாகவே பாரிய ஆயுதப் போராட்டத்தினால் இலங்கை அவதியுற்றது.

எனவே, இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிற்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமைகின்றதோ
அப்போதெல்லாம் ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சுகின்றது.

இந்த வருடத்திலாவது அந்த
நிலைமையை மாற்றி ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தனது செயற்பாடுகளை முன்னெடுக்க
வேண்டும்”  என கூறியுள்ளார். 

இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது : தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version