முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatta) பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தெல்தெனிய (Teldeniya) காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனியவில் உள்ள ஐ.சி.சி வீடமைப்புத் திட்டத்தில் ஆளில்லாத வீடொன்றின் வாகன திருத்துமிடத்தில் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், ஒரே இலக்கத்தில் பிலாவாலா பகுதியில் ஒரு பெண்ணின் மற்றொரு ஜீப் வண்டியை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க தலைமையில் தெல்தெனிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் எதிர்வரும், 7ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.