Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு புதைகுழி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு புதைகுழி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்

0

செம்மணி புதைகுழியை விடவும் யாழ்ப்பாணம் மணியம் தோடட்டப் பகுதியிலும் ஒரு மனித புதை குழி உள்ளதாக மாணவி கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் மரண தண்டனை கைதியான சோமரத்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இவ்வாறு செம்ணி மனித புதைகுழியை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் உண்மைகள் பேசட்டும் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்,

அரியாலை மனித புதைகுழி என்பது சோமரத்ன ராஜபக்சவிற்கு மட்டுமல்ல அரியாலையில் வாழும் மக்களுக்கும் தெரியும்.

 இவ்வாறான் மனித புதைகுழிகள் எங்கே உள்ளது என பார்த்தால் இராணுவத்தின் மண் அணை செல்கின்ற காவலரண்களுக்கு அருகிலும் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச்சாவடிகள், சதுப்பு நிலங்களிலும் காணப்படுகின்றன.

அரியாலை புங்கன்குளம் பகுதியில் இருந்த இராணுவ முகாமில் கூட மனித புதைகுழி இருந்திருக்கலாம் என்ற பரவலான கருத்து உள்ளது என்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…. 

https://www.youtube.com/embed/rNx7MVYRKo0

NO COMMENTS

Exit mobile version