நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
ஹொரணை பகுதியில் நேற்று(19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
அரிசி பிரச்சினை உள்ளது. ஏற்றுக்கொள்கிறோம். பற்றாக்குறை ஏற்பட்டது.
தரவுகள் இன்மையே அதற்கு காரணம்.
அரிசி தட்டுப்பாடு
நாட்டில் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. எவ்வளவு நுகரப்படுகிறது. எவ்வளவு பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது தொடர்பில் தரவுகள் இல்லை. இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது.
இந்த பெரும்போகத்தில் நெல் இருப்பது தனியாரிடம் மாத்திரமல்ல அரசிடமும் நெல் தொகையை வைத்திருப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம்.
நிர்ணய விலையை விட ஒரு ரூபாய் அதிகரித்தும் அரியை விற்பனை செய்ய இனி இடமளிக்க மாட்டோம் என்றார்.