Home உலகம் மாற்றப்பட்ட யாழ். கலாசார மத்திய நிலைய பெயர் – வரவேற்கும் பிரதமர் மோடி

மாற்றப்பட்ட யாழ். கலாசார மத்திய நிலைய பெயர் – வரவேற்கும் பிரதமர் மோடி

0

இந்திய உதவியின் கீழ் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிர்மாணிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க சின்னமாக திகழும் கலாசார நிலையத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளுவருக்கு (Thiruvalluvar) மரியாதை செலுத்தப்படுவதோடு இந்திய – இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு தெய்வப் புலவரான திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டமை தொடர்பில் பெருமகிழ்வடைதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) கூறியுள்ளார்.

இந்திய – இலங்கை உறவுக்கு சான்றாக அமைந்துள்ள கலாசார மையமானது இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான ஒரு அபிவிருத்தி திட்டமாகும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யாழ்.கலாசார மையம், திருவள்ளுவர் கலாசார மையமாக பெயர் மாற்றப்பட்டமை தமிழின் பெருமையை பரப்புவதற்கான பிரதமர் மோடியின் மற்றுமொரு மைல்கல் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இது இந்தியா – இலங்கை இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version