Home இலங்கை சமூகம் அநுரவும் வைத்தியர் அச்சுனாவும் தமிழர்களுக்கு தேவையானவர்களா…! அரசியல் ஆய்வாளர் கேள்வி

அநுரவும் வைத்தியர் அச்சுனாவும் தமிழர்களுக்கு தேவையானவர்களா…! அரசியல் ஆய்வாளர் கேள்வி

0

2009 ஆம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்தில் ஊழல், நிர்வாக சீர்கேடு, வாள்வெட்டு கலாச்சாரம் என்பவை அதிகரித்துள்ளதாகவும் அதை ஒழிக்க அநுர தேவை என்றும் கேள்வி கேட்பதற்கு அர்ச்சுனா எம்.பி. (Ramanathan Archchuna) போன்றவர்கள் தேவை என்றும் கனடாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

இலங்கையின் (Srilanka) பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பது மட்டுமின்றி பொருளாதார முதலீடுகள் செய்யும் அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அநுர அரசு முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.  

பூகோள சர்வதேச  அரசியலில் சிங்கள தேசம் சின்னா பின்னமாகி உள்ளதாகவும் சிங்கம் சுண்டெலியா மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  முள்ளிவாய்க்காலில்  தமிழர் இராணுவ பலத்தை இருந்தாலும் அரசியல் பலத்தை மீட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுர சீனா மற்றும் இந்தியாவை திருப்பிப்படுத்தினால் தன்னை தக்க வைக்க முடியும் என்றும் நினைப்பதாகவும் அது தான் அமெரிக்காவின் அறுகம் குடா பணய எச்சரிக்கையில் எதிர்விளைவு என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு…   

https://www.youtube.com/embed/z-5MF6UwlRc?start=3

NO COMMENTS

Exit mobile version