Home இலங்கை அரசியல் 7 நாட்கள் காலக்கெடு – அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

7 நாட்கள் காலக்கெடு – அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

0

ஈஸ்டர் தாக்குதல் (Easer attack) தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (udaya gammanpila) எச்சரித்துள்ளார்.

அத்துடன்  குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara dissanayaka) நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார்.

வெளிவராத அறிக்கைகள்

அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார்.

எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன்.

இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும்.

எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜித ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இது தொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன.

எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version