Home இலங்கை அரசியல் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியீடு : ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியீடு : ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியிடப்படும் திகதிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு எண்கள்

அதன்படி, இன்றும் (15.10.2024) நாளையும் (16.10.2024) விருப்பு எண்களை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிட வேண்டிய பணத்தின் அளவு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version