Home இலங்கை அரசியல் இதுவரை எதையும் சாதிக்காத அநுர அரசாங்கம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

இதுவரை எதையும் சாதிக்காத அநுர அரசாங்கம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

இந்த அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 24ஆம் திகதியுடன் ஒரு வருடங்கள் பூர்த்தியாகின்றது. ஆனால் இந்த அரசாங்கம் எதையும் சாதிக்கவில்லை என புதிய ஜனநாயக மார்க்சிய லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய
தினம்(13) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை விமர்சித்து வந்த அநுர 

மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கங்களை
விமர்சித்து ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த
அநுர தற்பொழுது நரேந்திர மோடியுடன் இந்தியாவுக்கு சென்று
வந்துள்ளார். அவர் இந்தியாவின் நலன்களுக்காகவே செயல்படுகின்றனர்.

தொடர்ந்தும்
சர்வதேச நாணய நிதியத்தை நம்பி இந்த அரசாங்கம் ஓடுகின்றது.

இறக்குமதி
பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் நம்பியுள்ளதுடன் இந்த நாட்டில் உற்பத்தியை
அதிகரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறக்குமதி
பொருளாதாரத்தையே நம்பியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version