Home இலங்கை அரசியல் 400 பில்லியனுக்கு மேல் கடன் பெற்றுள்ள அநுர அரசாங்கம் : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்

400 பில்லியனுக்கு மேல் கடன் பெற்றுள்ள அநுர அரசாங்கம் : ஹர்ஷ டி சில்வா பகிரங்கம்

0

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அலுவலகத்தில் இடம்பெற்ற நேற்று (18) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நிதி அதிகாரம் ஜனாதிபதியிடம் அல்ல. நாடாளுமன்றத்திடம் உள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது, ​​அது எவ்வாறு செய்யப்பட வேண்டும், சரியானதா? அல்லது தவறானதா? எனக் கணக்கிடுவது அவசியம்.

400 பில்லியன் ரூபாவுக்கு மேல் கடன்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் நாடாளுமன்றத்திடம் உள்ளது.

எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வதற்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு மீண்டும் அதள பாதாளத்திற்குச் செல்லும்.

முன்னைய அரசாங்கம் கடன் பெற்று, மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த பணம் முன்னைய அரசாங்கத்தால் திருடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்தது.

அதேபோலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த சில வாரங்களில் 400 பில்லியன் ரூபாவுக்கு மேல் கடன் பெற்றுள்ளது““ என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version