Home இலங்கை அரசியல் தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்

தொடர்ந்து சிக்கலில் சிக்கும் மகிந்த: அரச தரப்பிலிருந்து கடும் அழுத்தம்

0

முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தலைவருமான மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலானது ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் (Tangalle) உள்ள வீட்டில் தங்கி இருப்பதால் அவர் கொழும்பு (Colombo) வந்த பின்னர் இந்த வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுன

இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் (Sagara Kariyawasam) வினவிய போது, மகிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கடிதம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை யோசிக்காமல் இவ்வாறு செயற்படுவது தவறு என சாகர காரியவச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியாகும் முன்னரே இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version