Home இலங்கை அரசியல் இனவாதமற்ற அரசாங்கமே நாட்டிற்கு அவசியம்: அனுர வலியுறுத்து!

இனவாதமற்ற அரசாங்கமே நாட்டிற்கு அவசியம்: அனுர வலியுறுத்து!

0

இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் (Kinniya) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள மக்களின் பெரும்பான்மை நம்பிக்கையுடன் அரசாங்கத்தை அமைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சக்கள்

மேலும், “நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரதும் நம்பிக்கையைப் பெறும் அரசாங்கத்தையே தேசிய மக்கள் சக்தி விரும்புகிறது. 2019 ஆம் ஆண்டு இனவாதத்தை விதைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார்.

2015 இல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஜனநாயகத்தை மேம்படுத்துதல், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதில் கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி 2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தனர்.

“கொரோனாவிற்கு பலியான முஸ்லிம்களை புதைக்க அல்லது தகனம் செய்ய உலகின் பிற நாடுகள் முடிவு செய்தபோது, ​​​​அப்போதைய அரசாங்கம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை,” என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version