ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் சம பலத்தோடு காணப்பட்டாலும் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வாக்குகளாக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் காணப்படுவதாக கொழும்பு (Colombo) பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் (A. Sarveswaran) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் (Lankasri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்துடன் இருக்கும் வேட்பாளர்கள், பல்வேறு கட்சிகளாக பிரிந்து போட்டியிடுகின்ற போது தமிழ் தேசியத்தின் மீது தமிழ் மக்கள் அளிக்கின்ற வாக்குகள் சிதறடிக்கப்படுகிறது.
இதுவே தென்னிலங்கையில் உள்ள அரசியல் வேட்பாளர்களுக்கு சாதகமாக அமைகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க….