மக்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே ஒரு இடம் தேசிய மக்கள் சக்தி மட்டுமே என ஜனாதிபதி வேற்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை சமர்ப்பித்த பின்னர் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார.
பல தேர்தல்கள்
அவர் தொடர்ந்து தெரவிக்கையில், “கடந்த காலங்களில் பல தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் நாடும் மக்களும் பல வருடங்களாக பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற முடியும். மக்கள் இந்த நிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலை மக்களையும் நாட்டையும் கஷ்டங்களிலிருந்து மீட்பதற்கான ஒரு தருணமாக மாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/anura-kumara-only-npp-can-bring-change-1723713417
