Home இலங்கை அநுரவின் அதிமுக்கிய நகர்வு: விளாடிமிர் புடினுக்கு பறந்துள்ள கடிதம்

அநுரவின் அதிமுக்கிய நகர்வு: விளாடிமிர் புடினுக்கு பறந்துள்ள கடிதம்

0

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ((Vladimir Putin) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா, ரஷ்ய ஊடகமான RIA Novosti க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஒக்டோபர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு ஜனாதிபதி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

கோரிக்கை

மேலும், மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கும் இதேபோன்ற கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 3.6 பில்லியன் மக்கள்தொகை கொண்ட பத்து நாடுகள் தற்போது BRICS அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன், உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் 40% மற்றும் உலகளாவிய பொருட்களின் ஏற்றுமதியில் 25% இந்த BRICS உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version