Home இலங்கை அரசியல் வடக்கு தமிழர்களுக்கு அநுர விடுத்த மறைமுக எச்சரிக்கை அம்பலம்

வடக்கு தமிழர்களுக்கு அநுர விடுத்த மறைமுக எச்சரிக்கை அம்பலம்

0

தமிழர்கள்(tamils) தனக்கு வாக்களிக்கத் தவறினால் அவர்கள் இனவாத மோதலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின்(anura kumara dissanayaka) மறைவான செய்தி என ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கும் தேசபிரேமி ஜனதா பலவேகய அமைப்பு இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

“வடக்கில் உள்ள தமிழ் சமூகம் தென்னிலங்கையின் வாக்குப்பதிவு முறையை பின்பற்றி தனக்கு வாக்களிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, அண்மையில் வடக்கில் நடைபெற்ற பேரணியில் தெரிவித்தார்.

தமிழர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்

அவ்வாறு செய்யத் தவறினால் வடக்கில் உள்ள தமிழர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இன துருவமுனைப்பு ஏற்பட்டால் இனவாத மோதல் ஏற்படலாம் என்பதே இங்கு மறைக்கப்பட்ட செய்தியாகும்” என தேசபிரேமி ஜனதா பலவேகய தலைவர் சுகத் ஹேவாபத்திரன இன்று(10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

1983 கலவரத்தின் பின்னணியில் ஜே.வி.பி 

“ஜூலை 1983 கலவரத்தின் பின்னணியில் ஜே.வி.பி இருந்தது, ஆனால் இந்த விஷயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்த தேசபிரேமி ஜனதா பலவேகய இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version