Home இலங்கை அரசியல் புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அமைச்சரவை நியமனம்

0

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில்,  தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத்  உள்ளிட்ட மூவரடங்கிய அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் 

இவர்களின் கீழ் 15 அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் போன்ற அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கலாநிதி ஹரினி அமரசூரிய நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்  கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்,  பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி, சுகாதாரம்  போன்ற அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விஜித ஹேரத்திற்கு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் போக்குவரத்து சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளி விவகார அமைச்சு, சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளத்துறை, நீர்ப்பாசனம், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை ஆகிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version