தேசிய மக்கள் சக்தி, நிதி மற்றும் அரசியல் ஊக்கத்தொகைகள் மூலம் தங்களின் ஆதரவை
பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு
தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள,
மத்துகம பிரதேச சபையைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர்களே இந்தக் குற்றச்சாட்டைசுமத்தியுள்ளனர்.
காணொளி காட்சிகள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட குழுவின் உறுப்பினர்
ஒருவர், ஆரம்பத்தில் மாகாண சபை வேட்பு மனுக்களை வழங்குவதாக வாக்குறுதி
அளிக்கப்பட்டது.
பின்னர், தமது உறுப்பினர் ஒருவருக்கு 80 இலட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்
என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முதல் கூட்டம், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சருடன்
நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தின் காணொளிக் காட்சிகள் தம்மிடம்
உள்ளதாகவும், குறித்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
