Home இலங்கை அரசியல் ரணிலும் பிமலும் ஒரே நிகழ்வில்

ரணிலும் பிமலும் ஒரே நிகழ்வில்

0

முன்னான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர்பில் ஆளும் தரப்பு பெரிதும் விமர்சித்து வருகிறது.

எனினும், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ரணில் விக்ரமசிங்கவும், ஆளும் தரப்பின் அமைச்சரான பிமல் ரத்நாயக்கவும் கலந்துக்கொண்டமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இலங்கையின் பாடலாசிரியர், எழுத்தாளர் சமன் அத்தாவுடஹெட்டி எழுதிய “சமன் சேஸ் 2”, அவரது மகள் தாரகா அத்தாவுடஹெட்டி எழுதிய “சாக்ஹோலிக் ஹீனா” மற்றும் அவரது மகன் தருசர பெரேரா (தாரகா அத்தாவுடஹெட்டியின் மகன்) எழுதிய “பிளாக் டிராகன் – கலு மகரா” ஆகிய படைப்புகளின் முத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (12) கொழும்பில் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன கேட்போர் கூடாரத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்த நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோறும் கலந்துக்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version