Home இலங்கை அரசியல் ஜப்பான் வாழ் இலங்கையர்களை சந்திக்க புறப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்க

ஜப்பான் வாழ் இலங்கையர்களை சந்திக்க புறப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்க

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) ஜப்பான்(Japan) விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் (18) அவர் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பான் சென்றுள்ளார்.

ஜப்பான் விஜயம்

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 2.00 மணிக்கு ஜப்பானில் Tsukuba இல் Yatabe Citizen Hall இல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலரையும் அனுர குமார திசாநாயக்க சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version