Home இலங்கை அரசியல் பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாக முன்வைக்கப்படும் விமர்சனம்: மறுக்கும் அனுஷா சந்திரசேகரன்!

பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாக முன்வைக்கப்படும் விமர்சனம்: மறுக்கும் அனுஷா சந்திரசேகரன்!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) பணம் வாங்கியதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் சுயேட்சையாக களமிறங்கினேன்.

அரசாங்கத்திடம் பணம் பெற்று வாக்குவங்கிகளை உடைக்கவே பணம் பெற்றேன் என்று விமர்சனங்கள் வெளிவந்தன.

பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாக கூறப்பட்டது. சுயேட்சையாக பணம் களமிறங்கியது எனது பணத்தில் தான்.

5 வருடத்திற்கு முன்னர் நான் அரசியலுக்கு வரும் போது எவ்வாறு மலையக மக்களின் வாழ்க்கை இருந்ததோ இன்றும் அவ்வாறே உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வாங்கிகொடுத்தவுடன் மலையகம் மாறிவிட்டதா?

சம்பளம் பெற்றுக்கொடுத்தால் மட்டும் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் ஒன்று மட்டுதான் மலையக அரசியல், இதனை பெற்றுக்கொடுத்து விட்டால் மலையகத்தில் உரிமைத்தீர்வு, அபிவிருத்தி தீர்வு என அனைத்தும் கிடைத்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

இது விடயங்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில காணலாம்.

https://www.youtube.com/embed/XXN0BB7P5MQ

NO COMMENTS

Exit mobile version